சிக்ஸர் அடித்த வேகத்தில் அவுட்டான அபிஷேக் சர்மா தவறான முடிவால் இந்திய அணிக்கு நேர்ந்த பின்னடைவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நரேந்திர மோடி மைதானத்தில் சிக்ஸர் மழையை பொழிந்தார். சஞ்சு சாம்சனுடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கிய அவர், வெறும் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 34 ரன்கள் குவித்தார். இருப்பினும் ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே புல் ஷாட் ஆட முயன்று அவுட்டானார்.
அவுட்டான உடனே அபிஷேக் எடுத்த டிஆர்எஸ் முடிவு இந்திய அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. ரீப்ளேவில் பந்து கிளவுஸில் பட்டது தெளிவாக தெரிந்ததால் அவர் வெளியேற வேண்டியதாயிற்று. இதன் மூலம் இந்திய அணி தனது முக்கியமான ஒரு ரிவியூவை போட்டியின் ஆரம்பத்திலேயே இழந்தது. ஒரு இன்னிங்ஸில் இரண்டு ரிவியூக்கள் மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள 14 ஓவர்களில் ஒரு ரிவியூ மட்டுமே இருந்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.