சிகிச்சைப் பொருட்களை இனி விலையுயர்ந்ததாக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! விவரங்கள் உள்ளே

சிகிச்சைப் பொருட்களை இனி விலையுயர்ந்ததாக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! விவரங்கள் உள்ளே

மக்களவையில் மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிகரெட், மெல்லும் புகையிலை, ஹூக்கா மற்றும் ஜர்தா உள்ளிட்ட புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களின் மீது அதிக கலால் வரி விதிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் காலம் முடிந்த பின் புகையிலை பொருட்களின் மீதான வரி விதிப்பை தொடர்ந்து தக்கவைக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த மசோதாவால் புகையிலைப் பொருட்களின் விலை உயர்ந்து, அவற்றின் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அரசின் வருவாயை அதிகரிக்கும், அந்த நிதி சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும். இந்த மசோதா தற்போது மாநிலங்களவைக்குச் சென்றுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், புகையிலை பொருட்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு செஸ்ஸிற்குப் பதிலாகக் கலால் வரி நடைமுறைக்கு வரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *