சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யும் விஷால்?

நடிகர் விஷால் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்திருப்பது திரையுலகிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஷால், தான் ஒரு மாத காலமாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், இன்னும் நான்கு மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, அந்த மர்மப் பெண் யார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் விஷாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, இன்று மாலை நடைபெற உள்ள சாய் தன்ஷிகாவின் புதிய படமான ‘யோகி டா’ படத்தின் நிகழ்ச்சியில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து விஷால் தரப்பிலிருந்தோ அல்லது சாய் தன்ஷிகா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், இணையவாசிகள் பலர் இது உண்மையா இருக்குமா என்ற ஆச்சரியமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் விஷால் தனது திருமணம் குறித்து அறிவித்தால், அது திரையுலகில் ஒரு பெரிய திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.