சவுதி அரேபியாவை விட்டு வெளியேற அமெரிக்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரிப்பு

சவுதி அரேபியாவை விட்டு வெளியேற அமெரிக்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரிப்பு

ஈரான் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களை அடுத்து சவுதி அரேபியாவிலுள்ள தனது தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரியாதில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களால் பாதுகாப்பு கருதி இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிறகு இத்தகைய கட்டாய வெளியேற்ற அறிவிப்பு வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஈரான் ஆக்ரோஷமான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் அங்குள்ள அமெரிக்க ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது ரியாது தூதரகம் மிகக் குறைந்த பணியாளர்களுடன் மட்டுமே தற்காலிகமாக இயங்கி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *