சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தினமும் இத்தனை மணி நேர தூக்கம் அவசியம் என்கிறது புதிய ஆய்வு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தினமும் இத்தனை மணி நேர தூக்கம் அவசியம் என்கிறது புதிய ஆய்வு

எம்ரி பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க தினமும் சராசரியாக 7 மணிநேரம் 18 நிமிடங்கள் தூங்குவது அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது. சரியான தூக்கம் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தூக்கமின்மை உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்துகிறது. அதே சமயம் அதிகப்படியான தூக்கமும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வார இறுதி நாட்கள் மட்டுமின்றி தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *