சரியான முகவரி இருந்தும் டெலிவரி ஊழியர்கள் ஏன் அடிக்கடி போன் செய்கிறார்கள் இதோ எளிய தீர்வு

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யும்போது சரியான முகவரி குறிப்பிட்டிருந்தாலும், டெலிவரி ஊழியர்கள் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாமல் அடிக்கடி போன் செய்வது வழக்கம். இதற்குத் தீர்வாக ‘டிஜி பின்’ (DIGI PIN) தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. இது உங்கள் வீட்டின் நுழைவாயிலின் துல்லியமான டிஜிட்டல் இருப்பிடத்தைக் குறிக்கிறது. கூகுள் மேப்ஸில் உள்ள ‘பிளஸ் கோட்’ என்பதுதான் இந்த டிஜி பின். இது டெலிவரி ஊழியர்கள் எவ்வித குழப்பமுமின்றி நேரடியாக உங்கள் வீட்டின் வாசலுக்கு வர உதவுகிறது.
உங்கள் வீட்டின் டிஜி பின்னை அறிய கூகுள் மேப்ஸ் செயலியில் உங்கள் இருப்பிடத்தை நீண்ட நேரம் அழுத்தினால் கீழே தோன்றும் பிளஸ் கோடை நகலெடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது முகவரியுடன் இந்த டிஜி பின்னைச் சேர்த்தால் டெலிவரி விரைவாகவும் எளிதாகவும் அமையும். வாட்ஸ்அப் அல்லது அவசர கால சேவைகளுக்கும் இந்த டிஜிட்டல் முகவரியைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்த்து நேரத்தைச் சேமிக்க முடியும்.