சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பரவும் செய்திகளுக்கு மத்திய அரசு அதிரடி விளக்கம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பரவும் செய்திகளுக்கு மத்திய அரசு அதிரடி விளக்கம்

இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு போதுமான அளவில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் இயங்குவதாகவும், எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடையுமில்லை என்றும் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

பாரசீக வளைகுடாவிலிருந்து புறப்பட்ட ‘ஷிவாலிக்’ எல்பிஜி கப்பல் இன்று மாலை முந்த்ரா துறைமுகத்தை வந்தடைகிறது. அங்குள்ள இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை மற்றொரு கச்சா எண்ணெய் கப்பலும் இந்தியா வந்தடைய உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *