சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உங்கள் சிலிண்டரில் மீதமுள்ள கேஸ் அளவை எளிதாக கண்டறியும் வீட்டு முறைகள்
March 16, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் தமிழகத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் சிலிண்டர் முன்பதிவு காலமும் அதிகரித்துள்ளது. முகவர்கள் எரிவாயுவை பதுக்குவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் திடீரென எரிவாயு தீர்ந்துவிடுவதைத் தவிர்க்க சிலிண்டரில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
சிலிண்டரின் வெளிப்புறத்தில் மேலிருந்து கீழாகத் தண்ணீரை ஊற்றினால் எந்தப் பகுதி குளிர்ச்சியாக இருக்கிறதோ அதுவரை எரிவாயு இருப்பதாகக் கொள்ளலாம். மேலும் எரியும் சுடரின் நிறம் மாறுவதை வைத்தோ அல்லது எடை இயந்திரத்தைப் பயன்படுத்தியோ எரிவாயுவின் அளவைத் துல்லியமாகக் கணித்து தட்டுப்பாட்டு காலத்தைச் சமாளிக்க முடியும்.