சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை
March 14, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மாற்றாக ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, டீலர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தற்காலிகமாக மீண்டும் தொடங்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்திற்கு மட்டும் மத்திய அரசு 4,100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அடுத்த 45 நாட்களுக்குள் இந்த எரிபொருளை மாநில அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், இந்த மண்ணெண்ணெய் விநியோகம் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.