சட்டமன்ற தேர்தல் 2026 களம் காண அதிமுக சார்பில் 4 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக்குழு அமைப்பு
March 15, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி மற்றும் வளர்மதி ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அவர் அமைத்துள்ளார்.
கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்க ஆட்சி மன்றக் குழுவைச் சீரமைத்ததோடு, பிரசாரம், விளம்பரம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களைக் கையாள தனித்தனி குழுக்களையும் இபிஎஸ் அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அதிமுக எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து குழுவினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.