சட்டமன்றத் தேர்தலுக்கு தயாரான தவெகவின் 60 வேட்பாளர்கள் நேர்காணலில் விஜய் உருக்கம்
March 10, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக 60 வேட்பாளர்களுடன் நடத்திய நேர்காணலில் விஜய் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அரசியலைத் தவிர தமக்கு வேறு எதுவும் இல்லை என்றும், எதற்கும் துணிந்து தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தொகுதியின் செல்வாக்கு, மக்களின் மனநிலை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் உள்ள எதிர்பார்ப்புகளைக் கேட்டறிந்த விஜய், வெற்றிக்காக முழு மூச்சாக உழைக்க அறிவுறுத்தினார். வேட்பாளர்களின் திறமையை மதிப்பிடும் வகையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட இந்தச் சந்திப்பு தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்ட வேட்பாளர் நேர்காணல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.