சடலத்தின் கொழுப்பு மூலம் அழகு சிகிச்சை! அமெரிக்காவில் பரவும் வினோத டிரெண்ட்

சடலத்தின் கொழுப்பு மூலம் அழகு சிகிச்சை! அமெரிக்காவில் பரவும் வினோத டிரெண்ட்

அழகான உடல் அமைப்பைப் பெற பெண்கள் இப்போது பல்வேறு நவீன சிகிச்சைகளை நாடுகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது ஒரு வினோதமான மற்றும் சர்ச்சைக்குரிய மருத்துவ முறை ட்ரெண்டாகி வருகிறது.

இந்த முறையில், இறந்தவர்களின் உடலில் இருந்து கொழுப்பு சேகரிக்கப்பட்டு, அது அழகு தேடும் பெண்களின் உடலில் செலுத்தப்படுகிறது. இது இணையத்தில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த வினோத சிகிச்சை எப்படி நடக்கிறது?

அமெரிக்கப் பெண்கள் தங்கள் மார்பகம், இடுப்பு மற்றும் பிட்டம் ஆகியவற்றின் அழகை மேம்படுத்த ‘ஃபில்லராக’ (Filler) இந்த இறந்தவர்களின் கொழுப்பைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக அந்நாட்டின் முன்னணி அழகுசாதன நிறுவனம் ஒன்று இந்த கொழுப்புப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

செயல்முறை மற்றும் விலை

மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்தவர்களின் திசுக்களில் இருந்து இந்தக் கொழுப்பு எடுக்கப்படுகிறது. பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டு, டிஎன்ஏ மற்றும் உயிருள்ள செல்கள் நீக்கப்படுகின்றன.

பாரம்பரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைப் போல இதற்கு மயக்க மருந்து (Anesthesia) தேவையில்லை என்பதால் பலரும் இதை விரும்புகின்றனர். சாதாரண கிளினிக்குகளிலேயே ஊசி மூலம் இந்த கொழுப்பு உடலில் செலுத்தப்படுகிறது.

இதன் விலை மிகவும் அதிகம். உடலில் செலுத்தப்படும் அளவைப் பொறுத்து, 10,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

ஏன் இந்தத் தேர்வு?

பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டேரன் ஸ்மித் இது குறித்துக் கூறுகையில், “உடலில் போதிய கொழுப்பு இல்லாதவர்கள் அல்லது உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளால் (Ozempic போன்றவை) உடல் அமைப்பை இழந்தவர்கள், மீண்டும் அழகான தோற்றத்தைப் பெற இந்த முறையை நாடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *