சகோதரனின் உயிரைக் காப்பாற்றிய அண்ணன்! கூரையில் இருந்து விழுந்த தம்பியைப் பிடித்த நெகிழ்ச்சி வீடியோ

கேரளாவின் மலப்புரத்தில் பணியின்போது கூரையில் இருந்து தவறி விழுந்த தனது தம்பியை அண்ணன் ஒருவர் நொடிப்பொழுதில் காப்பாற்றிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கீழே வேலை செய்துகொண்டிருந்த அண்ணன், தம்பி தலைகீழாக வேகமாக விழுவதைக் கண்டார். அவர் உடனடியாக கையில் இருந்த பைப்பை கீழே போட்டுவிட்டு, கீழே வந்த தம்பியைச் சரியாகக் கைகளால் ஏந்திக் காப்பாற்றினார்.
அண்ணனின் இந்த மின்னல் வேகச் செயலால் தம்பி பெரும் காயங்கள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த உயிர்காக்கும் மீட்புப் பணி தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அண்ணனின் மன உறுதி, விழிப்புணர்வு மற்றும் விரைவான செயல்பாடு ஆகியவற்றை நெட்டிசன்கள் பாராட்டி அவரை ‘உண்மையான ஹீரோ’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
A young man fell from the roof in #Malappuram, in time the elder brother saved him before he fell to the ground. The #accident was caught on CCTV.#brotherlove #Kerala pic.twitter.com/TFNH9XCizp
— Chaudhary Parvez (@ChaudharyParvez) August 3, 2022