கோவை கோட்டையில் செக் வைத்த அதிமுக! தேர்தல் களத்திலிருந்து அதிரடியாக விலகுகிறாரா அண்ணாமலை
March 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஒதுக்கீட்டில் அதிமுக தங்களை வஞ்சித்துவிட்டதாக அண்ணாமலை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதும், வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதும் அவரை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த அதிருப்தி காரணமாக வரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இந்த வியூகம் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சி என அண்ணாமலை கருதுகிறார். தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட விதம் குறித்து மே 4-ஆம் தேதி டெல்லி தலைமையிடம் அவர் முறையிட உள்ளார். வேட்பாளராக இல்லாவிட்டாலும் கூட்டணி வெற்றிக்காகப் பணியாற்றுவேன் எனக் கூறியுள்ள நிலையில், இந்த மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.