கோவையில் தனியார் பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்
March 18, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கோவையின் சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தனியார் சொகுசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.37.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட இந்த பார்சல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ரூ.50,000-க்கு மேல் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லத் தடை உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்துப் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.