கோவில் உண்டியலில் 100 ரூபாய் நோட்டில் மாமியார் இறக்க வேண்டி பக்தர் எழுதிய விசித்திரமான கடிதம்
February 23, 2026

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹுலிகுண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் கண்டெடுக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு பக்தர் தனது மாமியார் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் இறந்துவிட வேண்டும் என்று கடவுளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது துயரத்தைத் தீர்க்க அந்த பக்தர் எழுதியுள்ள இந்த விசித்திரமான வேண்டுதல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வழக்கமாக மக்கள் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் வேண்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள், ஆனால் ஒருவரின் மரணத்தைக் கோரி எழுதப்பட்ட இந்த கடிதம் கோவில் நிர்வாகத்தை திகைக்க வைத்துள்ளது. கடிதத்தில் பெயர் குறிப்பிடப்படாததால் இதை எழுதியது யார் என்று தெரியவில்லை. இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களுடன் கோவிலுக்கு வரவேண்டாம் என நிர்வாகம் பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.