கோலி மற்றும் கெய்ல் கூட்டணியை விட ஹைதராபாத் அணியின் தொடக்க ஜோடியே ஆபத்தானது

கோலி மற்றும் கெய்ல் கூட்டணியை விட ஹைதராபாத் அணியின் தொடக்க ஜோடியே ஆபத்தானது

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் கூட்டணியை விடவும் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடியே மிகவும் அதிரடியானது என புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார். முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டும் இந்த ஜோடியால் தான் ஹைதராபாத் அணி தொடர்ந்து 250 ரன்களுக்கு மேல் குவித்து வருவதாக அவர் ஜியோ-ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஹைதராபாத் அணி ஹெட், அபிஷேக் மற்றும் கிளாசென் ஆகியோரை மட்டுமே அதிகம் சார்ந்து இருப்பதாக புஜாரா எச்சரித்துள்ளார். இவர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தினால் அந்த அணியின் பேட்டிங் வரிசை சரிந்துவிடுகிறது. சொந்த மைதானத்திற்கு வெளியே தடுமாறும் இந்த பலவீனத்தை சரிசெய்தால் மட்டுமே அவர்களால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்று அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *