கோலியின் சதம்; ரோஹித் என்ன சொன்னார்? அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட உண்மை

கோலியின் சதம்; ரோஹித் என்ன சொன்னார்? அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட உண்மை

ஜார்க்கண்டின் ராஞ்சியில் நவம்பர் 30, 2025 அன்று நடந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அற்புதமான சதம் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் இருந்த ரோஹித் சர்மாவின் எதிர்வினையால் பெரும் பேசுபொருளானது. 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து தனது 52வது ஒருநாள் சதத்தை கோலி பதிவு செய்தார். கோலி மைதானத்தில் வெற்றியை கொண்டாடும் போது, அருகிலிருந்த ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு ஏதோ பேசியது கேமராவில் பதிவானது.

அவர் என்ன சொன்னார் என்று சமூக வலைதளங்களில் பலவிதமான யூகங்கள் பரவிய நிலையில், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதை வெளிப்படுத்தினார். டிசம்பர் 1, 2025 அன்று, பஞ்சாப் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் ஒரு வீடியோவைப் வெளியிட்டது. அதில் ரோஹித்துக்கு அருகில் நின்றிருந்த அர்ஷ்தீப், ரோஹித் ஒரு பிரபலமான பாலிவுட் பாடலின் வரியைக் கூறியதாகத் தெரிவித்தார்: “நீலி பரி லால் பரி கம்ரே பந்த் முஜே நதியா பசந்த்…” என்று கூறியதைக் கேட்டு ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *