கோடிகளைக் கொட்டியும் ஏமாற்றம்! IPL 2026 ஏலத்தில் இந்த 3 நட்சத்திர வீரர்களுக்கு இடம் கிடைக்குமா?

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன் பெரும் அதிர்ச்சி! கடந்த சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மூன்று முக்கிய நட்சத்திர வீரர்களை அவர்களின் உரிமையாளர்கள் விடுவித்துள்ளனர். BCCI அறிவித்துள்ளபடி, வரும் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் ஒரே நாளில் மினி ஏலம் நடைபெற உள்ளது. அணிகள் 5 அல்லது 6 வீரர்களை மட்டுமே எடுக்க வாய்ப்புள்ளது. எனினும், கடந்த மெகா ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் ஆகியோரை எந்த அணியும் இந்த ஏலத்தில் வாங்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
வெங்கடேஷ் ஐயர்-ஐ KKR ₹23.75 கோடிக்கு வாங்கியபோதும், 11 போட்டிகளில் வெறும் 142 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார். அதேபோல, LSG தக்கவைத்த ரவி பிஷ்னோய் (₹11 கோடி), மற்றும் ‘ரைட் டு மேட்ச்’ கார்டு மூலம் DC-க்கு வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் (₹9 கோடி) ஆகியோரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உரிமையாளர்கள் இவர்களை விடுவித்ததையடுத்து, இந்த மினி ஏலத்தில் இவர்களுக்கு அதிக விலை கிடைப்பது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.