கேரளா அசாம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கலுடன் தொடங்கியது தேர்தல் திருவிழா
March 16, 2026

கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 24-ல் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மார்ச் 26-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த மூன்று பகுதிகளிலும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.