குழந்தை வளர்ப்பால் வந்த மன அழுத்தம் பாத்ரூமில் அமர்ந்து கதறி அழுத தாயின் வீடியோ வைரல்
March 14, 2026

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் இளம் தாய் ஒருவர் பாத்ரூமில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி தனது வேதனையை பகிர்ந்துள்ளார். குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரம் செலவாவதால் தனக்கென ஒரு நிமிடம் கூட அமைதி கிடைப்பதில்லை என்று அவர் அதில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பெற்றோரின் வாழ்க்கையில் இருக்கும் நிதர்சனமான சிரமங்களை வெளிப்படுத்துகிறது. பல தாய்மார்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் குழந்தைகளின் வளர்ச்சி பருவத்தில் இதுபோன்ற சூழல்கள் இயல்பானது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.