‘குறைந்த உடையில் வா’ மருமகளுக்கு ஆபாச அழைப்பு விடுத்த மாமனார்! ஓய்வுபெற்ற டிஎஸ்பி-யின் மகள் பரபரப்பு புகார்

பெங்களூரு அருகே உள்ள நெலமங்களா பகுதியில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி-யின் மகள் தன் மாமியார் குடும்பத்தினர் மீது அதிர்ச்சி தரும் புகாரை அளித்துள்ளார். அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்தப் பெண், தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திருமணமான 15 நாட்களிலேயே கணவர் டாக்டர் கோவர்த்தன், தன் தந்தை வழி சொத்து மற்றும் வாடகை பணத்தைக் கொண்டு நர்சிங் ஹோம் திறக்க வற்புறுத்தியதாகவும், வரதட்சணைக்காக சித்ரவதை செய்ததாகவும் புகார் கூறியுள்ளார்.
இவற்றில் மிகவும் மோசமான குற்றச்சாட்டு அவரது மாமனார் பேராசிரியர் நாகராஜு மீது சுமத்தப்பட்டுள்ளது. எஃப்ஐஆர்-இன் படி, மாமனார் அனிதாவுடன் ஆபாசமாகப் பேசியதாகவும், உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், பலமுறை அருவருப்பான பாலியல் அழைப்புகளை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நவீனப் பெண் போல குறைந்த உடையில்’ தன்னை அணுகும்படி மாமனார் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் தெரிவித்தபோது, அவர்கள் இது ‘வீட்டு விஷயம்’ எனக் கூறி அலட்சியப்படுத்தினர். தொடர்ச்சியான சித்திரவதையைத் தாங்க முடியாமல், அனிதா நெலமங்களா காவல் நிலையத்தில் கணவர், மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்யவே, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.