குன்னலூர் ஊராட்சியில் பள்ளிக்கு ஊராட்சி மக்கள் அன்பளிப்பு
March 25, 2025

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள குன்னலூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த நூறாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், பள்ளியின் சுற்றுச் சுவரை பழுது நீக்கி புதிய சுவரை அமைத்துள்ளார்.
இந்த ஊராட்சி மக்களும் பள்ளிக்கான அன்பு உதவிகளை வழங்கி அசத்தியுள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பல லட்சம் மதிப்பிலான டிவி, மேஜை, நாற்காலி, பீரோ மற்றும் மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆழ்ந்த நெகிழ்ச்சியும், பெருமிதமும் ஏற்படுகின்றது.