குதிரை பேரத்திற்கு பயந்து ஒடிசா எம்எல்ஏக்களை கர்நாடகாவிற்கு கடத்திய காங்கிரஸ்

ஒடிசா மாநிலங்களவை தேர்தலில் பாஜகவின் குதிரை பேரத்திலிருந்து தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்க காங்கிரஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அக்கட்சியின் 8 எம்எல்ஏக்கள் பெங்களூரு அருகே உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மாநிலங்களவையின் ஒரு இடத்திற்கு பாஜகவின் திலீப் ரே மற்றும் பிஜேடியின் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் தனது ஆதரவை பிஜேடிக்கு வழங்கியுள்ள நிலையில், பாஜகவின் அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சி காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராமச்சந்திர கடம் முன்னிலையில் இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது அவர்கள் பெங்களூரு அருகே பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர்.