குடும்ப சோகத்தையும் தாண்டி உலகக்கோப்பை வென்று காட்டிய இஷான் கிஷன் தன் வெற்றியை மறைந்த சகோதரிக்கு சமர்ப்பித்தார்

குடும்ப சோகத்தையும் தாண்டி உலகக்கோப்பை வென்று காட்டிய இஷான் கிஷன் தன் வெற்றியை மறைந்த சகோதரிக்கு சமர்ப்பித்தார்

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக தனது சகோதரி மற்றும் மைத்துனரை சாலை விபத்தில் இழந்தார் இஷான் கிஷன். அந்த ஆறாத துயரத்திலும் நாட்டுக்காக அகமதாபாத் மைதானத்தில் களம் கண்ட அவர், 54 ரன்கள் விளாசி இந்தியாவை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த அபாரமான ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தில் இந்த உலகக்கோப்பையை தனது மறைந்த சகோதரி மற்றும் மைத்துனருக்கு கண்ணீர் மல்க சமர்ப்பித்தார் இஷான். தனிப்பட்ட இழப்பைத் தாண்டி நாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவரது இந்த அர்ப்பணிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *