குடும்பத் தகராறால் எல்லை தாண்டிய பாகிஸ்தான் பெண் இந்திய ராணுவத்திடம் சிக்கினார்
December 18, 2025

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த ஷாநாஸ் அக்தர் என்ற பாகிஸ்தான் பெண்ணை இந்திய ராணுவம் கைது செய்தது. 35 வயதான இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர். குடும்பத் தகராறு காரணமாக அவர் எல்லையைத் தாண்டியிருக்கலாம் என்று ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.
தற்போது ராணுவக் காவலில் உள்ள அந்தப் பெண், மேலதிக விசாரணைக்காக உள்ளூர் போலீாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாகத் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.