குடும்பத்தில் சர்க்கரை நோயா? ஆபத்தைத் தவிர்க்க இதோ 6 எளிய வழிகள்!

குடும்பத்தில் சர்க்கரை நோயா? ஆபத்தைத் தவிர்க்க இதோ 6 எளிய வழிகள்!

உலகளவில் நீரிழிவு நோய் ஒரு பெருந்தொற்றாக மாறி வரும் நிலையில், முறையான வாழ்வியல் மாற்றங்கள் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, குடும்பத்தில் ரத்த உறவுகளுக்கு இந்நோய் இருந்தால், டைப்-2 நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகம். உடல் பருமன் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் இந்த பாதிப்பை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

நார்ச்சத்துமிக்க உணவு, உடற்பயிற்சி மற்றும் போதிய உறக்கம் இந்நோயைத் தடுக்க உதவும். 25 வயதிலிருந்தே ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். அதிக தாகம் அல்லது சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, விழிப்புணர்வுடன் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *