குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்தித்தார் மேற்கு வங்க ஆளுநர் ஆர் என் ரவி

குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்தித்தார் மேற்கு வங்க ஆளுநர் ஆர் என் ரவி

மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.என். ரவி திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு குறித்த புகைப்படத்தை குடியரசுத் தலைவர் அலுவலகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 12ஆம் தேதி ஆளுநராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இதுவாகும்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அங்குள்ள 294 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த முறை எட்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் இந்த முறை வெறும் இரண்டு கட்டங்களாகக் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *