கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி! இலவசமாக IPL காணலாம்
March 20, 2025

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அருமையான செய்தி! இப்போது IPL 2025 போட்டிகளை எந்த கூடுதல் செலவுமின்றி பார்க்கலாம், ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறப்பான ஆஃபரை கொண்டு வந்துள்ளது. மார்ச் 22 முதல் தொடங்கும் இந்த மிகப்பெரிய தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் முற்றிலும் இலவசமாக பார்க்கலாம்.
இந்த ஆஃபரில், ₹299 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 90 நாட்கள் IPL 2025 போட்டிகளை இலவசமாக காண முடியும். புதிய வாடிக்கையாளர்களும் இதே விதிமுறையின் கீழ் இந்த சேவையை பெறலாம். ஏற்கனவே ரீசார்ஜ் செய்தவர்கள் ₹100 கூடுதல் திட்டம் ரீசார்ஜ் செய்தால் இந்த சிறப்பு சலுகையை பெறலாம். இந்த ஆஃபர் மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.