கிராமங்களுக்கு குடிநீரே இல்லை பாட்டில் தண்ணீருக்கு ஆடம்பர கோரிக்கையா
December 18, 2025

பாட்டில் குடிநீருக்கான சர்வதேச தரத்தை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை குடிநீரே கிடைக்காத நிலையில், இத்தகைய கோரிக்கைகள் “ஆடம்பர வழக்கு” என்று நீதிபதி சூரிய காந்த் காட்டமாகத் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் மக்கள் இன்றும் நிலத்தடி நீரையே நம்பியிருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இது நகர்ப்புற சிந்தனையை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், வசதிகள் குறித்த விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.