கியூபாவை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப் மற்றும் தீவு தேசத்தை உலுக்கும் கடும் மின்சார நெருக்கடி

வெனிசுலா அதிபர் மதுரோவின் வீழ்ச்சிக்கு பிறகு தற்போது டொனால்ட் டிரம்பின் பார்வை கியூபா மீது திரும்பியுள்ளது. கியூபாவை எந்த வகையிலாவது தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாகவும் அந்த நாட்டை வைத்து தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அமெரிக்க கடற்படை கியூபாவை சுற்றிலும் முற்றுகையிட்டுள்ளதால் அந்த நாட்டுக்கு வரும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முற்றிலும் தடைபட்டுள்ளன.
இந்த கடுமையான பொருளாதார தடையால் கியூபாவின் மின்சார கட்டமைப்பு முடங்கி ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது. அதிபர் மிக்வேல் டயஸ்-கானெலை பதவியிலிருந்து அகற்றுவதே வாஷிங்டனின் முக்கிய நோக்கம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையால் கியூபாவில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.