காந்தாரா திரைப்படத்தை கேலி செய்த ரன்வீர் சிங்கிற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
February 24, 2026

‘காந்தாரா’ திரைப்படத்தின் தெய்வீக நடனத்தை கேலி செய்த புகாரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டாலும், நீதிபதி எம். நாகபிரசன்னா அவரது பொறுப்பற்ற செயலை கடுமையாக விமர்சித்தார்.
பிரபலங்கள் பலருக்கு முன்மாதிரியாக இருப்பதால் அவர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கேலி செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி எச்சரித்தார்.