காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் கஞ்சா போதை ஆசாமிகள் அரிவாளுடன் புகுந்து பயங்கர ரகளை
March 16, 2026

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றாலும், அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்த இந்த வன்முறைச் செயல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை விதைத்துள்ளது.
இந்த துயரமான சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதையே இது காட்டுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் கூட பாதுகாப்பு இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.