காஞ்சிபுரத்தில் பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

காஞ்சிபுரத்தில் பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லையால் கணவரை இழந்த ஷம்சியா, தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் மனமுடைந்த அவர், பிள்ளைகளை அநாதையாக விட மனமின்றி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்த ஷம்சியா, வயல்வெளி கிணற்றுக்கு அழைத்துச் சென்று இச்செயலை செய்துள்ளார். அங்கு கைப்பற்றப்பட்ட கடிதத்தில், அவமானத்துடன் வாழப் பிடிக்காமல் கணவர் சென்ற வழியிலேயே செல்வதாக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *