கள்ளக்காதல் சந்தேகத்தில் மனைவியின் தலைமுடியை வெட்டிய கணவன்: மாமியாருடன் சேர்ந்து கொடூர செயல்
September 19, 2025

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்காதல் சந்தேகத்தின் பேரில் கணவன் ஒருவர், தனது தாயுடன் சேர்ந்து மனைவியை முதலில் தாக்கி, பின்னர் அவரது கை கால்களை கட்டி, தலைமுடியை வெட்டியுள்ளார். தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து கணவரும் மாமியாரும் சேர்ந்து இந்த கொடூர செயலை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். கணவர் மற்றும் மாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.