கள்ளக்காதலுக்கு இடையூறு! கணவரைக் கொன்று தலைமறைவான ரூ.20 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்ட மனைவி டெல்லியில் பிடிபட்டார்
December 14, 2025

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கணவன் சல்மான் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, ரூ.20 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மனைவி சுமைலாவை டெல்லியில் இருந்து போலீசார் கைது செய்தனர். சப்பார் காவல் நிலையத்தின் போலீஸ் குழு அவரை கைது செய்வதில் வெற்றி பெற்றது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
சுமைலாவுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது என்றும், இதற்கு சல்மான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆரம்ப விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர். இந்த தகராறின் காரணமாகவே சுமைலா தனது காதலன் மற்றும் மற்றொரு கூட்டாளியுடன் சேர்ந்து சல்மானை சுட்டுக் கொன்றார். பின்னர் விசாரணையை திசை திருப்ப, சடலத்தை மீரட்டில் இருந்து முசாபர்நகருக்கு கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலையோரம் வீசியுள்ளனர்.