கலிபோர்னியா இந்தியர் நகைக்கடையில் 16 கோடி கொள்ளை போன பகீர் பின்னணி

கலிபோர்னியா இந்தியர் நகைக்கடையில் 16 கோடி கொள்ளை போன பகீர் பின்னணி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பிரீமாண்ட் பகுதியில் இந்தியருக்கு சொந்தமான நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் சினிமா பாணியில் புகுந்து கைவரிசை காட்டியுள்ளது. முகமூடி அணிந்த அந்த கும்பல் ஒரு நிமிடத்திற்குள் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து தப்பியது. கடையில் இருந்த 80 சதவீத நகைகள் திருடப்பட்டதால் உரிமையாளர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இச்சம்பவம் நடந்து 9 மாதங்கள் கடந்த நிலையிலும், போலீசார் வெறும் 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முக்கிய குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றி வருவது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கலிபோர்னியாவில் அதிகரித்து வரும் இத்தகைய துணிகர கொள்ளைகளை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *