கற்றாழை: உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அற்புத மூலிகை

கற்றாழை (Aloe Vera) ஒரு இயற்கை மூலிகையாக பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாக அறியப்படுகிறது. உடல் நலம் மேம்படவும் நோய்களை தடுப்பதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.
கற்றாழை உடலுக்குப் பல வகையான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (Acid Reflux) போன்ற கோளாறுகளுக்குச் சிறந்த தீர்வாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உணவுக்குழாயில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும் தன்மை கொண்டது. அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்கள் தாக்காமல் காக்கும் திறன் கொண்டது.
மேலும், கற்றாழை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வலுவாக வைக்கும் தன்மை கொண்டது. சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு கற்றாழை சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. சிறு மற்றும் ஆழமான காயங்களை விரைவில் குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
இந்த பல்வகை மருத்துவ பண்புகளால் கற்றாழையை வீட்டில் வைத்திருந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் தரும்.