கர்ப்ப காலத்தில் தாய்க்கு இருக்கும் சர்க்கரை அளவு குழந்தையின் மூளையை பாதிக்குமா

கர்ப்ப காலத்தில் தாய்க்கு இருக்கும் சர்க்கரை அளவு குழந்தையின் மூளையை பாதிக்குமா

கர்ப்ப காலத்தில் தாயின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் வரை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுமார் 23 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், டைப்-1 அல்லது டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான சர்க்கரை நஞ்சுக்கொடி வழியாக கருவை அடைந்து மூளை வளர்ச்சியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பைத் தவிர்க்க, கருத்தரிக்கும் முன்பே சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *