கர்நாடகாவில் தெருநாய்கள் தாக்குதல் பெண் படுகாயம், ஆத்திரமடைந்த மக்கள் நாயை அடித்துக் கொன்றனர்

கர்நாடகாவில் தெருநாய்கள் தாக்குதல் பெண் படுகாயம், ஆத்திரமடைந்த மக்கள் நாயை அடித்துக் கொன்றனர்

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள குப்பி நீதிமன்ற வளாகத்தில் தெருநாய் ஒன்று தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். குடும்ப வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த 35 வயதான கங்கூபாய் என்ற பெண், கழிவறையிலிருந்து வெளியே வரும்போது திடீரென நாய் ஒன்று அவரைத் தாக்கியது. நாயின் கடியால் முகத்தில் பலத்த காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த மக்கள், அந்த நாயைத் துரத்திச் சென்று அடித்துக் கொன்றனர். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல; சமீபத்தில், ஹொன்னாளி தாலுகாவின் மாவிணகோட்டை மற்றும் சஸ்வேஹள்ளி கிராமங்களிலும் தெருநாய் தாக்குதலில் நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் காயமடைந்தனர். இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்கள் தெருநாய்கள் குறித்த பொதுமக்களின் கவலையையும் கோபத்தையும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *