கர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்பு உறுதியா? 48 மணி நேரத்தில் ‘பிக் சேஞ்ச்’ வருகிறது என கார்ஜே சூசகம்

காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மாற்றப்படுவார் என்ற ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்தச் சஸ்பென்ஸுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இறுதியாக மௌனம் கலைத்துள்ளார். அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது என அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் விவாதிப்பதாக கார்கே உறுதிப்படுத்தியுள்ளார். டிசம்பர் 1-க்குள் நிலைமை முழுமையாகத் தெளிவுபெறும். துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், கார்கே தங்கள் குறைகளைக் கேட்டதாகவும், சிவக்குமாரே அடுத்த முதல்வர் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர். மறுபுறம், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். இந்த உட்கட்சி குழப்பத்திற்கு டெல்லியில் உள்ள தலைமை முடிவெடுக்கும்.