கரூரில் ரயில் மோதி சுக்குநூறான கல்லூரி பேருந்து மற்றும் நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்
March 15, 2026

கரூர் குளத்தூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கல்லூரி பேருந்து மீது சிமெண்ட் ஆலைக்கு சென்ற ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. பரமத்தியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்தில் மோதிய வேகத்தில் ஓட்டுநர் உட்பட 25 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தனர்.