கமுதி பேருந்து நிலையத்தில் மதுபோதை ஆசாமியின் வெறிச்செயல் இருவரின் கால்கள் துண்டானது

கமுதி பேருந்து நிலையத்தில் மதுபோதை ஆசாமியின் வெறிச்செயல் இருவரின் கால்கள் துண்டானது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய நபர் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். காரில் ஏற்பட்ட தகராறில் தனது நண்பர்கள் மீதே காரை ஏற்றியதில் இரு இளைஞர்களின் கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கடைகளை அடித்து நொறுக்கியது. அங்கிருந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடிய நிலையில், காரை நிறுத்திய மக்கள் அந்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *