கணவரே நடத்திய விசித்திர திருமணம்: ‘குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என மனைவியிடம் கூறிய கணவன்!

கணவரே நடத்திய விசித்திர திருமணம்: ‘குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என மனைவியிடம் கூறிய கணவன்!

உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகரில், ஒரு கணவர் தனது மனைவி மற்றும் அவரது காதலருக்குத் திருமணம் செய்து வைத்த வியத்தகு நிகழ்வு சமூகத்தில் புதிய பேசுபொருளாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டு திருமணம் ஆன இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் வாழ விரும்பியபோது, கணவர் இந்த முடிவை எந்தவித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டார்.

கணவர் முன்னிலையிலேயே ஒரு கோவிலில் காதலருடன் மனைவிக்குத் திருமணம் நடைபெற்றது. இதை கிராம மக்கள் அனைவரும் பார்த்துள்ளனர். தன் ஒன்பது வருட திருமண பந்தத்தை முறித்துக்கொண்ட மனைவி, தன் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்ல சம்மதித்தாள். குழந்தைகளைத் தானே வளர்ப்பதாக கணவர் உறுதியளித்துள்ளார். இச்சம்பவம் சமூகத்தில் ஒரு அரிதான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *