கணவன் காரின் மீது ஏறி அமர்ந்த மனைவி! மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ
September 16, 2025

மீரட்: உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் கணவன்-மனைவிக்கிடையே நடந்த வீதி நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் ஓட்டிச் சென்ற காரின் மீது மனைவி ஏறி அமர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டது.
மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்குள் பல நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பாக கணவன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை நீதிமன்ற விசாரணையின் போது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், மனைவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்ய காவல்துறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.