கடற்படை தளம் அருகே சீன ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட மர்ம பறவை மீட்பு பெரும் பரபரப்பு

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்கரை பகுதியில் சீன தயாரிப்பான ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சீகல் பறவை ஒன்று சிக்கியதையடுத்து பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடற்படையின் மிக முக்கியமான ஐஎன்எஸ் கதம்பா தளத்திற்கு மிக அருகாமையில் இந்த பறவை கண்டறியப்பட்டதால் உளவு வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். முதற்கட்ட ஆய்வில் இது சீன அறிவியல் அகாடமியின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி தொடர்பானதாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், அதன் இருப்பிடம் பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே ஆபரேஷன் சிந்துர் போன்ற முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் கார்வார் தளம் முக்கிய பங்கு வகித்துள்ளதால் இப்பகுதி எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருக்கும். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு கழுகு பிடிபட்டது பின்னர் அது ஆராய்ச்சி தொடர்பானதாக உறுதி செய்யப்பட்டது. தற்போது பிடிபட்டுள்ள இந்த சீகல் பறவை வனத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்த பின்னரே இந்த பறவையின் வருகை குறித்த முழுமையான பின்னணி தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.