ஓலா மற்றும் ஊபருக்கு சவாலாக அமித் ஷா அறிமுகப்படுத்திய பாரத் டாக்ஸி திட்டம்
February 23, 2026

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஓட்டுநர்களை சந்தித்து பாரத் டாக்ஸி சேவையின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டுறவுத் துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையில் ஓட்டுநர்களே உரிமையாளர்கள் என்றும், இது முழுமையாக செயல்பட மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவை என்பதால் ஓட்டுநர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமுல் மற்றும் நபார்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த சேவையில் ஓட்டுநர்களிடம் கமிஷன் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் மற்ற தனியார் நிறுவனங்களைப் போல இதில் பீக் ஹவர் கட்டணங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.