ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகளின் மெகா பிளான் என்ன?

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகளின் மெகா பிளான் என்ன?

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது மற்றும் 8 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளன.

இருப்பினும், இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) விலகி நிற்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் சொல்வதற்கெல்லாம் எங்களால் கையெழுத்திட முடியாது” என்று அபிஷேக் பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முறையான ஆலோசனை மற்றும் கூட்டு அறிக்கை இருந்தால் மட்டுமே ஆதரவு அளிக்க முடியும் என்பது அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஓம் பிர்லா தற்காலிகமாக அவையை நடத்துவதிலிருந்து விலகியுள்ளார். சபாநாயகரின் நடுநிலைமை குறித்த இந்த மோதலால், மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *