ஒரே ஆண்டில் ₹6.91 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு
May 28, 2025
&w=826&resize=826,465&ssl=1)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தூணாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு (FDI) 2025ஆம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. மத்திய தொழில் ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தி துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 14 சதவீத உயர்வுடன் ₹6.91 லட்சம் கோடி (அல்லது ₹69,15,43 கோடி) மதிப்பிலான முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது.
இந்த வளர்ச்சி இந்தியாவின் மேம்பட்ட தொழில்துறை சூழல், அரசின் முயற்சிகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் தாக்கமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் 39 சதவீத முதலீடுகளை ஈர்த்து, முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கங்கள் சிறப்பாக உள்ளன என்பதையும் இது காட்டுகிறது.