ஒரே ஆண்டில் யூனுஸின் சொத்து மதிப்பு ₹1.61 கோடி உயர்வு! ரகசியம் என்ன?

ஒரே ஆண்டில் யூனுஸின் சொத்து மதிப்பு ₹1.61 கோடி உயர்வு! ரகசியம் என்ன?

வங்கதேச பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் சொத்து விவரங்களை அமைச்சரவை பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான கணக்கின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 15 கோடியே 62 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 1.61 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. சேமிப்புப் பத்திரங்கள், காலமுறை வைப்பு நிதி மற்றும் பரம்பரையாகக் கிடைத்த பங்குகள் மூலமே இந்த வருமானம் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது அவருக்கு உள்நாட்டில் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், வெளிநாடுகளில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன.

ஆச்சரியப்படும் விதமாக, முகமது யூனுஸின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும், அவரது மனைவி அப்ரோசி யூனுஸின் சொத்து மதிப்பு 2.11 கோடியிலிருந்து 1.27 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. முகமது யூனுஸ் உட்பட இடைக்கால அமைச்சரவையின் மொத்தம் 27 உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *